![](https://i.imgur.com/A0j2Yn5.png)
நேற்றைய தினம் நிதியமைச்சர் மங்கள சமரவீர முன் வைத்துள்ள இவ்வாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கவர்ச்சியாகவும் நல்ல திட்டமாகவுமே இருக்கின்ற போதிலும் ஆறு மாதங்களே பதவியிலிருக்கப் போகும் அரசால் அதனை செயற்படுத்த முடியுமா என கேள்வியெழுப்பியுள்ளார் நாமல் ராஜபக்ச.
![](https://i.imgur.com/1lqpona.jpg?1)
அத்துடன், இவ்வாறான ஒரு திட்டத்தை நான்கு வருடங்களுக்கு முன்னரே முன் வைக்காதது ஏன்? எனவும் இப்போது கவர்ச்சிகர அறிவிப்புகளை மேற்கொள்வது ஏன் எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இப்பின்னணியில், ஆயுள்காலம் வெகுவாக இல்லாத அரசினால் வரவு-செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment