ஒன்றரை வருடங்களுக்கு மேலாக திட்டமிட்டு வாடிக்கையாளர்களின் பண வைப்புகளைத் திருடி வந்த செயற்பாட்டில் சம்பத் வாங்கியின் பிராந்திய முகாமையாளர் மற்றும் கிளை முகாமையாளர் உட்பட உயரதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வைப்பினை தவறான முறையில் பதிந்து அதனூடாக வேறு கணக்குகளுக்கு பணத்தை மாற்றும் திட்டமிட்ட நடவடிக்கை ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியில் 80 மில்லியன் ரூபா வரை இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment