எதிர்வரும் வெசக் போயா தினத்துக்குள் நாட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என தான் பொலிஸ் மா அதிபருக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கின்ற அவர், சட்டவிரோத சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்கென பொலிசாருக்கு மூன்று மாத கால அவகாசமே வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
போதைப் பொருள் ஒழிப்பில் ஜனாதிபதி மைத்ரிபாலவின் நிலைப்பாட்டுக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியும் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment