
இலங்கையில் வசிக்கும் தனது தாயைப் பார்க்க வந்திருந்த அமெரிக்க பிரஜையொருவர் நாடு திரும்புகையில் பயணப்பொதியில் துப்பாக்கியொன்றை மறைத்து வைத்துக் கொண்டு செல்ல முயன்ற நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது தந்தைக்குச் சொந்தமான துப்பாக்கியையே குறித்த நபர் இவ்வாறு எடுத்துச் செல்ல முயன்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
56 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment