தமது கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கிக் கப்பலை விரட்டியடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் கடற்படை.
இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் யுத்தமொன்றை உருவாக்குவதற்கு மோடி நிர்வாகம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் பாகிஸ்தானில் தாக்குதல் நடாத்தச் சென்று சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானியையையும் நல்லெண்ண அடிப்படையில் விடுவித்துள்ளார் பாக். பிரதமர் இம்ரான் கான்.
ஆயினும், நேற்றைய தினம் (4) இரவு தமது கடற்பகுதிக்குள் இந்திய நீர்மூழ்கியொன்று நுழைய முயன்றதாகவும் கடற்படையினர் உரிய நடவடிக்கையெடுத்ததன் மூலம் நுழைவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment