ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் கோட்டாபே ராஜபக்ச, எதிர்வரும் 8ம் திகதி பெரமுன - சு.க இணைந்து நடாத்தவுள்ள பொதுக் கூட்டமொன்றில் மேடையேறி தனது உத்தியோகபூர்வ வரவை அறிவிக்கவுள்ளதாக பெரமுன தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரே தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதாக கோத்தா தெரிவித்து வருகின்ற அதேவேளை அது நடக்கப் போவதில்லையெனவும் முதலீட்டாளர்களைக் கவர்வதற்கே இவ்வாறு பரப்புரை செய்யப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இவ்வாரம் கோட்டாபே மேடையேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment