மூதூர் தள வைத்தியசாலை விரைவில் தரமுயர்த்தப்படும்: ஹிஸ்புல்லா - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 March 2019

மூதூர் தள வைத்தியசாலை விரைவில் தரமுயர்த்தப்படும்: ஹிஸ்புல்லா


யுத்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு பல்வேறு அடிப்படை தேவைகளுடன் இயங்கும் திருகோணமலை மூதூர் வைத்தியசாலையின் அத்தியவசியத் தேவைகள் மிக விரைவில் தீர்க்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று மாலை மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு காணப்படும் பல்வேறு தேவைகள் குறித்து ஆராய்ந்ததுடன் அங்கு காணப்படும் நிலை குறித்தும் கண்டறிந்து கொண்டனர்.



இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment