ஜே.வி.பியின் ஆதரவும் கிடைக்கப்பெற்று மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிபீடமேறுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் குமார வெல்கம்.
பெரமுன சார்பாக கோத்தபாய களமிறக்கப்படுவதை தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவிக்கும் அவர் மஹிந்த மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
அண்மையில் ஜே.வி.பி - மஹிந்த இடையே இடம்பெற்ற சந்திப்பின் பின்னணியில் தமக்கு இந்த நம்பிக்கை மலர்ந்திருப்பதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment