பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க எதிர்வரும் 8ம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கோட்டாபே ராஜபக்ச பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தான் சரியான தருணத்தில் அரசியல் நுழைவு பற்றி அறிவிக்கவுள்ளதாக இன்று அவர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்ய, தற்போதுள்ள பொருளாதார கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தான் அதற்குத் தயாராகவே இருக்கின்ற போதிலும் சரியான தருணத்தில் அதற்கான அறிவிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபே அரசியலுக்கு வரப்போகிறார், பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறார் போன்றவை போலியான மாயையை உருவாக்கி கூட்டத்தை கவர்வதற்கான தந்திரம் என எதிர்த்தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment