மஹிந்த - அநுர அடுத்த வாரம் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 March 2019

மஹிந்த - அநுர அடுத்த வாரம் சந்திப்பு!


மஹிந்த ராஜபக்ச - ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க இடையிலான சந்திப்பொன்று எதிர்வாரும் வாரம் நிகழவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



மஹிந்த ராஜபக்ச அரசின் முறைகேடுகளை கடுமையாக விமர்சித்து வந்த போதிலும் நடைமுறை அரசுடனும் அனைத்து விடயங்களிலும் ஒத்துப் போகாத ஜே.வி.பி, வரவு - செலவுத் திட்டங்களையும் எதிர்த்தே வாக்களித்து வந்துள்ளது.

இந்நிலையில், அரசின் எதிர்வரும் பட்ஜட்டைத் தோற்கடிப்பதன் மூலம் ஆட்சி மாற்றத்தை உருவாக்க மஹிந்த அணி கங்கணம் கட்டியுள்ளதுடன் ஜே.வி.பி தலைவருடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment