
கடந்த வருடம் சபுகஸ்கந்தையில் வைத்து மன்ன என அழைக்கப்படும் தனுஷ்க சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர் இன்று காலை நவகமுவயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சமில பிரசாத் கருணாராத்ன என அறியப்படும் 37 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள அதேவேளை சடலத்துக்கு அருகே ரி-56 ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலக குழு மோதல்கள், துப்பாக்கி சண்டைகள் மற்றும் கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment