இந்துக்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான், பஞ்சாப் மாநில அமைச்சர் பயாசுல் ஹசனை பதவி நீக்கியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான்.
குறித்த நபரைப் பதவி விலக்கியுள்ள இம்ரான் கானின் கட்சி, சகிப்புத் தன்மையே பாகிஸ்தானின் அடிப்படை எனவும் குறித்த நபரின் பேச்சுக்களுக்கும் கட்சிக்கும் அல்லது பஞ்சாம் மாநில அரசுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையெனவும் தெரிவித்துள்ளது.
சமாதானம் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் பிரதமர் இம்ரான் கானின் திட்டத்துக்கு ஆதரவானவர்களே அதிகாரத்தில் இருக்க வேண்டும் எனவும் கட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment