கொழும்பு 3 மெதடிஸ்த கல்லூரி , பெண்கள் பாடசாலைக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்த மாணவர்கள் 34 பேர் கைது செய்யப்பட்டு, எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்த மாணவர்கள் அங்கு பட்டாசு கொளுத்தியதோடு, கட்டிடங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர். அத்துடன் பொலிசாரால் விரட்டப்பட்ட நிலையில் ஓடியவர்களால் அப்பகுதியில் சென்ற நபர் ஒருவர் தள்ளப்பட்டு வீதியில் வீழ்ந்து காயத்துக்குள்ளான சம்பவமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment