அரசியல் கட்சிகளின் வருடாந்த கணக்கறிக்கைகள், யாப்பு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனங்களை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் வருடாந்தம் சமர்பிக்கும் கணக்கறிக்கைகள் இவ்வாறு பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான அரசியல் கட்சிகளின் நிதிப் பற்றாக்குறைகளைத் தீர்த்து வைத்த நன்றிக்கடனுக்காக சிலர் இன்றும் அமைச்சர் பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment