டுபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் மதுஷிடமிருந்து இலங்கையில் ஒரு சில நபர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்பின்னணியில் பொலிசார் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறையில் உள்ளவர்கள் தமது உறவினர்களுடன் உரையாடவென வழங்கப்படும் சிறிது நேர வாய்ப்பினைப் பயன்படுத்தியே மதுஷ் இவ்வாறு இலங்கைக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment