ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவுக்கு எதிராக சாட்சியங்கள் வலுவாக இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதுடன் நாலக டி சில்வாவிடம் பல தடவைகள் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் உளவாளி நாமல் குமாரவுடனான உரையாடலின் போதே நாலக டி சில்வா இது தொடர்பில் தகவலை வெளியிட்டிருந்த நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு மைத்ரி - ரணில் உறவிலும் விரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment