
அடுத்து வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடனான கூட்டணி சந்தேகத்துக்குள்ளாகியுள்ள நிலையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியாக பயணிப்பதையே ஐ.தே.க தெரிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஐ.தே.க கூட்டங்களில் கவர்ச்சிக்காக தனியாட்சி பற்றி பேசப்படுவதைத் தவிர்த்துக்கொள்ள கட்சியின் உயர் மட்டத்தலைவர்கள் முயற்சியெடுத்து வருவதற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டமொன்றில் அறிவிப்பாளர் இது பற்றி பேசும் நிலையில், தனியாட்சி அமைக்கப் போவதாக தெரிவிக்க வேண்டாம் என கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அதனைத் தடுக்கும் காணொளியை கீழ்க் காணலாம்.
No comments:
Post a Comment