மாகந்துரே மதுஷோடு டுபாயில் கைதான நடிகர் ரயனின் வீட்டை ஏலவே சோதனையிட்டிருந்த பொலிசார் அங்கு போதைப்பொருள் அளவிடப் பயன்படுத்திய சிறிய தராசு மற்றும் சந்தேகத்துக்குரிய பயணப் பொதிகளைக் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில், ரயனின் சகோதரி மற்றும் பெற்றோர் வாழும் வீட்டை சோதனையிடுவதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெற்று அங்கு சென்ற வேளையில் ரயனின் குடும்பத்தினர் வீடு மாறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்ததாகவும் இந்நடவடிக்கைகள் பலத்த சந்தேகத்தை உருவாக்குவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வாகனத்தில் ஏற்றப்பட்ட பொருட்களை மீண்டும் இறக்கி, பொலிசார் சோதனையிட்டுள்ள அதேவேளை குறித்த இடத்துக்கு இரவு நேரங்களில் சொகுசு வாகனங்கள் வருவதாகவும் அதன் பின் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டு இரகசிய சந்திப்புகள் இடம்பெறுவதாகவும் அயலவர்களும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயன், அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் மதுஷின் கேளிக்கை நிகழ்வுக்குக் கலைஞர்களாகவே சென்றதாக அண்மையில் ரயனின் புதல்வி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment