இலங்கையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் பெண்கள், வெளிநாட்டவர் உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்ததாக சிறைச்சாலைகள் நிர்வாகம் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இரு பெண்கள் மற்றும் வெளிநாட்டவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 99 பேரிலிருந்து ஒருவரை தெரிவு செய்யப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரு பாடங்களில் சித்தியெய்த 18-45 வயதுக்குட்பட்ட நபரையே தெரிவு செய்யவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment