
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரமுன சார்பாக களமிறக்கப்படும் வேட்பாளர் கட்சியைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.

ஸ்ரீலசுக - பெரமுன உறவுகள் குறித்த சந்தேகம் நிலவுகின்ற நிலையில் தமது கட்சி சார்பில் மைத்ரியே வேட்பாளர் என சு.க தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் சந்தேகம் தொடர்கிறது.
கடந்த ஒக்டோபரின் இரு தரப்புக்கும் ஏற்பட்ட நட்புறவு மைத்ரியை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக்குவது எனும் அடிப்படையிலேயே என பொதுவாக அரசியல் மட்டத்தில் ஊகம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment