
கெவுமா தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாக 119 ஊடாகத் தாம் வ ழங்கிய இரகசிய தகவலை முதலில் பொலிசார் புறக்கணித்ததாக தெரிவிக்கிறார் வீட்டின் உரிமையாளர்.

ஒரு லட்ச ரூபா முற்பணம் செலுத்தி, மாதம் 25,000 ரூபாவுக்கு வாடகைக்கே வீடு கொடுக்கப்பட்டதாகவும் கெவுமா தேடப்படுவதாக ஊடகங்களில் தகவல் வெளியானதையடுத்து தாம் 119 ஊடாக இவ்விடயத்தைக் கூறியும் பொலிசார் அங்கு வரவில்லையென அவர் தெரவிக்கிறார்.
எனினும், சந்தேக நபர் கைதான சில தினங்களுக்குப் பின்னர் விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்று நேற்றைய தினம் பெருந்தொகை போதைப்பொருள், ஆயுதங்களைக் கைப்பற்றியிருந்தமையும் பிரதேச மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு ஜயவேவா சொல்லி , கைதட்டி வாழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment