கஷ்மீர் பிரச்சினையை அம்மக்கள் விரும்பும் வகையில் நேர்மையுடன் தீர்த்து வைப்பவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனவும் தான் அதற்கான தகுதியை இன்னும் பெறவில்லையெனவும் தெரிவிக்கிறார் பாக். பிரதமர் இம்ரான் கான்.
தேர்தல் வெற்றியைக் கருத்திற்கொண்டு மோடி அரசு உருவாக்க முனைந்த யுத்தத்தை லாவகமாகத தவிர்த்ததுடன் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானியையும் உடனடியாக திருப்பியனுப்பி சர்வதேச அவதானத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள நிலையில் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என பாக். நாடாளுமன்றில் பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இம்ரான் பெருந்தன்மையுடன் அதற்கான தகுதியைத் தாம் இன்னும் பெறவில்லையெனவும் கஷ்மீர் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பவருக்கே அது வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment