திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோப்பூர் மதனியா பெண்கள் அரபுக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் கட்டிடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டிடமானது இன்று (04) துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அரபுக் கல்லூரி அதிபர் ஏ.எச். அஷ்ஷெய்க் ஜரூஸ் மௌலவி தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் உரிய திட்டம் கம்பரெலிய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் திறப்பு விழா நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளரா ஈ.எல்.அனீஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெஸீலா சேரவில பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.அன்வர் முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.நிஸ்மி, தோப்பூர் வட்டார தலைவர் முஜாஹித் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
-ஹஸ்பர் ஏ ஹலீம்
No comments:
Post a Comment