
யாழ்ப்பாணம் விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் அலெய்னா பி டெப்னிட்சுடனான கிளிநொச்சி - யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் சந்திப்பொன்று சந்திப்பு ஒன்று யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் 07 ஆம் திகதி வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.
இதன்போது 1990 ஆம் ஆண்டில் பலவந்தமாக ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட வடபுலத்து முஸ்லீம்களின் சவால்கள், மீள்குடியேற்ற தடைகள், இன்றைய சமகாலநிலையும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், எம்மவர்களின் களநிலைகள் தெளிவுபடுத்தப்பட்டன.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட நிலைமாற்றலுகான நீதி , உண்மை , மீள்நிகழாமை, இழப்பீடுகள் போன்றவற்றை மையப்படுத்தி எமது மக்களின் நிலைமைகள், மீள்குடியேற்றத்தின் தடைகள் அதனை நிவர்த்திக்க ஏதுவான சமாந்தர கட்டமைப்பு, ஒருபகுதி மீள்குடியேற்ற தேவையை நிவர்த்திக்கக்கோரி, அமெரிக்க தூதுவரிடம் ஆவணப்படுத்தலுடன் மனுக்கள் கையளிக்கப்பட்டது.
இதன்போது புத்தளம் வாழ் யாழ் - கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனத்தின் சார்பாக செயலாளர் ஹஸன் பைறூஸ் வெளிக்கள இணைப்பாளர் பதுருதீன் நிலாம், முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக ஆர் .முஹம்மது குவைஸ், யாழ்மாவட்டம் சார்பாக அஷ்ஷேக் சுபியான் மௌலவியின் பிரதிநிதியாக கே.சுரைஸ், கிளிநொச்சிமாவட்ட பிரதி நிதியாக க.முஹம்மது கபீர், பூநகரி பிரதேச உறுப்பினர் ஆகியோர் பிரசன்னமாகி கருத்துககளை தெரிவித்திருந்தார்கள்.
-கரீம் எ.மிஸ்காத்
No comments:
Post a Comment