கஃபாவுக்கு இந்துக்கள் உரிமை கொண்டாடுவொம்: சுவாமி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 March 2019

கஃபாவுக்கு இந்துக்கள் உரிமை கொண்டாடுவொம்: சுவாமி!


பாபரி மஸ்ஜித் மீள நிறுவப்பட வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவு அமைப்பு (OIC) தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் இந்துக்கள் கஃபாவை சிவலிங்கம் என உரிமை கொண்டாடலாம் என தெரிவிக்கிறார் இந்தியாவரின் சர்ச்சைப் பேர்வழி சுப்பிரமணிய சுவாமி.


அயோத்தியிலேயே பாபரி மஸ்ஜித் மீள நிறுவப்பட வேண்டும் எள ஓ.ஐ.சி. அமைப்பி நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு சுவாமி தெரிவித்துள்ள அதேவேளை, ராமஜன்மபூமியில் மஸ்ஜித் நிறுவப்பட வேண்டும் எனில் இந்துக்கள் கஃபாவை சிவலிங்கமாக உரிமை கொண்டாட முடியும் என்கிறார்.



1992ல் இந்துத்வா சக்திகளால் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதேவேளை அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் சுமார் 2000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தமையும் அதனை ஆதரித்த பி.ஜே.பி. தரப்பே தற்போது ஆட்சியதிகாரத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment