மஹிந்த ராஜபக்ச ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் தான் பெரமுனவை விட்டு விலகிச் செல்லப் போவதாக தெரிவித்த விமல் வீரவன்ச தற்போது அமைதியாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது ஜே.வி.பி.
விமல் விலகிச் செல்வதால் பெரமுனவுக்கு எந்த நஷ்டமுமில்லையென்பதை தம்முடனான பேச்சுவார்த்தை மூலம் மஹிந்த ராஜபக்ச எடுத்துரைத்துள்ளதாகவும் தற்போது விமல் வீரவன்ச தனது சவால் பற்றி பேசத் தயங்குவதாகவும் ஜே.வி.பி தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் ஜே.வி.பி - மஹிந்த ராஜபக்ச சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையில் நாட்டில் பெரும்பாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதற்கு இணங்கியுள்ளதாக அக்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment