இலங்கைப் பெண்களை, வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் தனக்கு உடன்பாடில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று அந்நியச் செலவாணியூடாக நாட்டுக்குப் பணம் அனுப்புபவர்களின் தயவிலேயே இங்குள்ளவர்கள் சுகபோக வாழக்கையை அனுபவிப்பதாகவும் தன்னால் இதை ஜீரணிக்க முடியாதுள்ளதாகவும் மைத்ரி மேலும் தெரிவிக்கிறார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment