மினுவாங்கொடை - கல்லொழுவை, அன்னாசி வத்தை, "நந்துன் உயன", இலக்கம் 266/22 என்ற இல்லத்தில் வசித்து வந்த (பேருவளையை, பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும் கொண்ட) அஹமட் காஸீம் (வயது - 88) என்பவர், கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
கிடைத்த தகவல்களுக்கேற்ப, இவரைப் பல இடங்களில் தேடியும் இதுவரையிலும் எங்கும் கிடைக்கவில்லை. இவர், இறுதியாக வெள்ளை, கருப்பு மற்றும் நீல நிறங்கள் கலந்த "ரீ" சேர்ட்டும், பெட்டி அடையாளம் கொண்ட வெள்ளைச் சாரமும் அணிந்திருந்தார்.
இவரைப்பற்றிய தகவல்கள் ஏதும் கிடைத்தால், உடனடியாக 072 - 1107747 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு, இவரது குடும்பத்தார் கேட்டுக்கொள்கின்றனர்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment