மாவனல்லை, தனகம பகுதி வீடொன்றுக்குள் புகுந்து நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 37 வயது நபர் ஒருவர் காயத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்து இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடாத்தி விட்டு தப்பியோடியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காயப்பட்டவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவனல்லை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment