பாதாள உலகத்துக்கு ஆயுத விற்பனை செய்யும் முன்னாள் புலிகள் - sonakar.com

Post Top Ad

Saturday, 9 March 2019

பாதாள உலகத்துக்கு ஆயுத விற்பனை செய்யும் முன்னாள் புலிகள்


வட-கிழக்கைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகள், தென்னிலங்கை பாதாள உலகத்தினருக்கு பெருந்தொகை ஆயுதங்களை விற்பனை செய்தும் விநியோகித்துமுள்ளதாக பொலிசாரின் விசாரணைத் தகவல்களை ஆதாரங்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


2007ம் ஆண்டு அநுராதபுர  விமானப்படை மீதான தாக்குதலிலிருந்து தப்பித்த புலி உறுப்பினர் ஒருவரே இவ் வியாபாரத்தை நடாத்தி வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த வருடம் மார்ச் மாதம் அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இக்குழுவைச் சேர்ந்த வேதன் என அறியப்படும் முன்னாள் புலி உறுப்பினர், முன்னாள் கடற்படை உறுப்பினரும் உள்ளடக்கம் எனவும் வவுணதீவு பொலிசார் கொலையிலும் இக்குழுவின் தொடர்பிருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment