எதிர்வரும் வெசக் போயாவுக்குள் நாட்டில் சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் விநியோகத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவு விடுத்துள்ள நிலையில் பொது மக்களின் உதவியையும் நாடுகிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.
இப்பின்னணியில், தமது பிரதேசங்களில் இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0113 024 820/48/50 ஆகிய இலக்கங்கள் ஊடாக பொது மக்கள் இது குறித்து பொலிசாருக்குத் தகவல் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment