மிக நீண்ட காலமாக இருந்து வந்த ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை தொடர்பிலான சட்டத்திற்குப் பதிலாக புதிய, இயற்றப்பட்ட ஒரு சட்டச் செயன்முறையை உருவாக்கும் விதமாக, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர், மார்ச் மாதம் 7 ஆம் திகதியன்று அச்சு ஊடகங்கள் மூலம் பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைக் முன்வைக்குமாறு, பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை தொடர்பிலான சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டச் செயன்முறை ஒன்றினை உருவாக்கும் படி, உச்ச நீதிமன்றம் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. (YMMA) பேரவை தாம் முன்வைக்கும் விரிவான பரிந்துரைகளை ஒரு சட்ட வரைபு நகல் மூலம், 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, முஸ்லிம் சமய கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் வளாகத்தில் வைத்து, அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி எஸ்.எம் முஹம்மத் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த முன்மொழிவுகள் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. (YMMA) பேரவையின் தேசிய தலைவர் எம்.என். எம். நாபீல், தேசிய பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.எம். ரிஸ்மி, தேசிய பிரச்சினைகள் தொடர்பிலான தலைவர் கே.என். டீன், செயலாளர் சாபிர் ஸவாத், கலாநிதி ஜால்தீன் மற்றும் முன்னாள் தலைவர் காலித் எம்.பாருக், குழுவின் ஆலோசகர் ஜாவிட் யூஸுப் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment