நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையையோ பாராளுமன்ற தேர்தல் முறைமையையோ மாற்றுவதற்கு கால அவகாசம் போதாது. அவ்வாறு செய்ய போனால் எல்லாம் குழம்பி போகலாம் என தெரிவிக்கிறார் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம்.
நேற்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், அனைத்து மாகாணங்களிலிருந்தும் முன் வைக்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கள் கோரிக்கைகளில் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்ட சிலவற்றை அரசியலமைப்பு திருத்தத்தில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமையை வாக்களித்தபடி மாற்றுவதற்கான அவகாசம் இப்போது இல்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment