பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசார நாளை 04ம் திகதி 44வது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் நாடெங்கிலும் அவருக்காக பல்வேறு பூஜை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது பொது பல சேனா.
இதற்கிடையில், கடந்த பெப்ரவரி நான்காம் திகதி சுதந்திர தினத்தன்று கிடைக்காமல் போன பொது மன்னிப்பு நாளை கிடைக்கும் எனவும் ஞானசாரவின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும், பொது மன்னிப்பு விவகாரம் பகிரங்கப்படுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளான நிலையில் ஜனாதிபதி அவ்விடயத்தைக் கைவிட்டிருந்தமையும் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment