க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் முதல் 14 மாணவர்களுக்கு உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வகையிலான புலமைப்பரிசில் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.
இவ்வருடம் 14 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்படுகின்ற அதேவேளை, எதிர்வரும் வருடங்களில் பிராந்திய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்க்கும் இவ்வாய்பினை வழங்கவுள்ளதாகவும் இத்திட்டம் இவ்வருடம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் மங்கள தெரிவித்துள்ளார்.
இதனூடாக மாணவர்கள் கேம்ப்ரிட்ஜ், ஹார்வட், ஒக்ஸ்போர்ட் போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க முடியும் எனவும் தமது கல்வியை நிறைவு செய்தபின் 10 வருட காலம் கட்டாயமாக இலங்கையில் சேவை புரிய வேண்டும் என்பதே நிபந்தனையெனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment