தொழிலதிபர் ஒருவருக்கெதிரான வழக்கை வாபஸ் பெறுவதற்கு 80,000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் அரச உயர் பதவிகளில் உள்ள பலர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகளில் கைதாகி வருவதுடன் பல்வேறு கடத்தல் மற்றும் பணய நாடகங்களிலும் தொடர்புபட்டுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன் தொடர்ச்சியில் சப்புகஸ்கந்த வர்த்தகரிடம் லஞ்சம் பெற்ற குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment