அருவக்காடு கழிவு முகாமைத்துவத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 March 2019

அருவக்காடு கழிவு முகாமைத்துவத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு


புத்தளம், அருவக்காடு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கென 7000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.


குறித்த கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்ற போதிலும், வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கம் தளரா நிலையில் செயற்படுகிறது.

இந்நிலையிலேயே இப்பாரிய தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவ மையம் அமைவதை தூரப் பகுதிகளில் உள்ளவர்களே எதிர்ப்பதாகவும் அது அடிப்படையற்றது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிக்கிறார்.


இந்நிலையில், புத்தளம் எதிர்ப்பாளர்கள் சார்பில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment