6ம் பராக்கிரமபாகு மன்னனுக்குப் பின் இலங்கையைத் தன்னிறைவுள்ள நாடாக மாற்றியது தானே எனவும் இருந்தாலும் தனக்கெதிராக பாரிய விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நிகழ்வுகளையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பொறுப்பேற்க மறுத்திருந்தால் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் பாழாய் போயிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
பிங்கிரியவில் ஏற்றுமதி வலய நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment