மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த 325 பேரின் என்புக்கூடுகள் அடங்கிய பாரிய மனிதப் புதைகுழி கி.பி 1499 - 1719 வரையான காலத்திற்குட்பட்டது என காபன் டேட்டிங் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, புளோரிடா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே இத்தகவல் வெளியிடப்படுவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையின் அரச மருத்துவ அதிகாரிகள் இது குறித்து முன்னர் வழங்கியிருந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய கட்டிடம் ஒன்றை இடித்த போது கண்டுபிடிக்கப்பட்ட இம்மனிதப் புதைகுழி தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்ட காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என பாரிய சந்தேகம் நிலவி வந்த நிலையில் புளோரிடா, நிறுவனத்தின் பரிசோதனை ஆய்வினடிப்படையில் 300 - 500 வருட கால பழமையானது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment