சாய்ந்தமருது பெண்கள் 24 பேருக்கு 'தைரியத்தாய்' விருது - sonakar.com

Post Top Ad

Saturday, 9 March 2019

சாய்ந்தமருது பெண்கள் 24 பேருக்கு 'தைரியத்தாய்' விருது



சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிராம மட்டத்தில் சமுர்த்தி மற்றும் சமூக நல செயற்பாடுகளில் சிறந்து  விளங்கிய மகளிருக்கு 'தைரியத்தாய்' விருது  வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (08) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக  சமுர்த்தி தலைமையக சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்யின் வழிகாட்டலில் சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா தலைமையில் இடம்பெற்ற   இந்நிகழ்வுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவின் பதில் பணிப்பாளர் ஐ.டி.என்.சஞ்ஜீவனி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வங்கி, நிதிப் பிரிவின் வட-கிழக்கு இணைப்பு அதிகாரி ஐ.அலியார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய பிரதி அதிபர் நஸ்லின் றிப்கா அன்சார், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எம்.அப்துல் கபூர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தனது பிள்ளைகளை கஷ்டத்தின் மத்தியிலும் கல்வியில் உயரிய இடத்திற்கு கொண்டுவந்த மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக பிரிவு மட்டத்தில் தங்களை ஆளுமையுள்ளவர்களாக மாற்றி சமுர்த்தி சிறுகுழு, சமுர்த்தி சங்கங்க செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய பெண்கள் 16 பேருக்கும், சமுர்த்தி திட்டத்தினை கிராம மட்டத்தில் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியதுடன் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பெண் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 8 பேருக்கும் 'தைரியத்தாய்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



மேலும் பெண் சுயதொழில் முயற்சியாளர் 5 பேருக்கு கடன் வழங்கல் மற்றும் பெண் அதிஷ்டசாலி ஒருவருக்கு 2 லட்சம் ரூபா வீட்டு லொத்தர் காசோலை வழங்கல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கும் நினைப்வுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

-றியாத் ஏ. மஜீத்

No comments:

Post a Comment