ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ம் ஆண்டுக்கான பட்ஜட் தயாராகி விட்டதாக அறிவித்துள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.
இதனடிப்படையில் வரவு-செலவுத் திட்டம் நாளை நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்டோபர் அரசியல் பிரளயத்தினால் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்திலேயே கடந்த சில மாதங்கள் அரசாங்கம் இயங்கி வந்தது.
இந்நிலையில், அடுத்த பட்ஜட் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளமையும், வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் முனைப்பில் மஹிந்த ராஜபக்ச ஜேவிபியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment