
2019ம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு-செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பிற்கு ஆதரவாக 119 பேர் வாக்களித்துள்ள நிலையில் 43 மேலதிக வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து 76 பேர் வாக்களித்துள்ள அதேவேளை ஜே.வி.பி மற்றும் ஸ்ரீலசுக உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
இம்முறை வரவு-செலவுத் திட்டம் கவர்ச்சிகரமானதாக முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நிராகரிப்பதற்கான காரணங்கள் குறைவாகவே இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment