2019 வரவு - செலவுத்திட்டம் நாடாளுமன்றில் தற்போது நிதியமைச்சரினால் முன் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சமய வழிபாட்டுத்தளங்கள் அபிவிருத்திக்கென (தலா) ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பெரலிய வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த 4800 கோடி ரூபா ஒதுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் பேசாலை மற்றும் பருத்தித்துறையில் மீன்பிடித்துறைமுகங்களை நிர்மாணிக்க 1.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரவு - செலவுத் திட்டத்தினை நிதியமைச்சர் தொடர்ந்து சபையில் சமர்ப்பிக்கின்றார்.
No comments:
Post a Comment