
நல்லாட்சி அரசின் முதல் பத்து திருடர்கள் என பெயரிடப்பட்டு ( 'යහපාලන ටොප් ටෙන් - කම්බ හොරු') நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் மஹிந்த ராஜபக்சவிடம் முதற்பிரதி கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்தானந்த தகவல் வெளியிட்டுள்ளார்.
2.5 வருட நல்லாட்சி அரசின் ஊழல் மோசடிகள் தொடர்பில் பொலிசில் மேற்கொண்ட முறைப்பாடுகள், அவை தொடர்பில் நடவடிக்கையெடுக்கத் தவறியமை தொடர்பிலான ஆதாரங்களும் தனது நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மஹிந்தானந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment