கழிவு நீர் சர்ச்சை: மல்வானையில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்! (video) - sonakar.com

Post Top Ad

Thursday, 28 February 2019

கழிவு நீர் சர்ச்சை: மல்வானையில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்! (video)


பியகம வலயத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அண்மைக்காலமாக வடிகட்டப்பாமல் அனுப்புவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், அசௌகரியங்களை முன் வைத்து மல்வானை பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.



கழிவு நீரை வடிகட்டு அனுப்புவதற்கான ஒப்பந்தத்தை மீறி அண்மைக்காலமாக இரவு வேளைகளில் துர்நாற்றம் வீசும் கழிவு நீர் வெளியேற்றப்படுகின்றமை குறித்து கவனயீர்ப்பு நிமித்தம் இன்று திடீரென இரவு வேளையில் பிரதேச பொது மக்கள் ஒன்றிணைந்து 8 மணி முதல் 11 மணி வரை இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில், பியகம பொலிசார் தலையிட்டிருந்ததுடன் நாளை ஜும்மாவிற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வழிசெய்வதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் மேல் மாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பிரதானியைத் தொடர்பு கொண்டு தான் உரையாடியதாகவும் நாளைய தினம் இதற்கான தீர்வு எட்டப்படும் எனவும் ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


- M. Nasmeer / M. Iflar

No comments:

Post a Comment