UNP அபிவிருத்தி நடவடிக்கைகள் இருட்டடிப்பு: ஹலீம் விசனம் - sonakar.com

Post Top Ad

Sunday, 10 February 2019

UNP அபிவிருத்தி நடவடிக்கைகள் இருட்டடிப்பு: ஹலீம் விசனம்


ஐக்கிய தேசியக் கட்சியானல் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு பெரியளவில் ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்குவதில்லை. அக்குறணைப் பிரதேசத்தில் கடந்த கால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலும் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்குப் பின்னாலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் கணிசமானளவு முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதற்கான விளம்பரங்களுக்கு ஊடகங்கள்  முக்கியத்துவம் வழங்குவதில்லை. ஊடகங்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி விசயங்களை கவனத்திற் கொள்ளாமல்  அதிகளவு அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கே அதி முக்கியத்துவம் வழங்கி வருகின்றது என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அக்குறணை குருகொட ஆண்கள் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி குருகொட பாடசாலை மைதானத்தில் அதிபர்  எஸ். எம் ஹம்சி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட  முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இந்தப் பாடசாலையின் மைதானத்திற்காக இம்முறை என்னுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 10 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளேன்;. அதற்கான நிதி வெகுவிரைவில் வந்து கிடைக்கும். அது மட்டுமல்ல இந்தப் பாடசாலையினை மீளக் கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.  இது என்னுடைய பாடசாலை. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் அவர்களுடன் கதைத்து தேவையான வங்களைப் பெற்றுத் தருவதற்கு நான ;தயாராக இருக்கின்றேன்.

கடந்த காலங்களில் இப்பாடசாலையின் கல்வி பௌதீக வளர்ச்சிக்காக  மாகாண கல்வி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் நான் ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியவை.  அது பற்றி  இப்பாடசாலையின் வரலாறுகள் சான்று பகரும்.

ஒரு மாணவன தனது பாடசாலையில் கல்வி கற்றும் அதே சந்தர்ப்பத்தில் விளையாட்டிலும் ஈடுபடுவது மிகவும் முக்கியத்துவாய்தவையாகும். ஒரு மாணவன் தனக்கு கற்பிக்கப்படும் கல்வியை கிரகித்துக் கொள்வதற்கு சிறந்த ஆரோக்கியம் உள்ளவனாகவும் சுகதேகியாகவும்  சுறுசுறுப்புள்ளவனாகவும் இருக்க வேண்டும். ஆகவே ஒரு மாணவன் விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமுள்ளவனாக மட்டுமன்றி சுறுசுறுப்புள்ளவனாகவும் மாற்றமடைகின்றான். ஆகவே கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனும் விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் சிறந்தவையாகும்.

அது மட்டுமன்றி ஒரு மாணவன் விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் நல்ல பண்புகளைக் கொண்டவனாக மாற்றம் அடைகின்றான். விசேடமாக தலைமைத்துவத்தைப் மதிக்கும் பண்பு பெரியோர்களை மதிக்கும் பண்பு  வெற்றி தோல்விகளை சமனாக ஏற்றுக் கொள்ளும் பணபு போன்றவற்றை பெற்றுக் கொள்ளுகின்றான்.

விசேடமாக கூட்டாக, ஒன்றாக, விளையாட்டில் ஈடுபடும் போது தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் பண்புடன் தனது வாழ்க்கையில் ஏதும் பிரச்சினைகள் ஏற்படும்  சமயத்தில் அதை நுனுக்கமாக ஆராய்ந்து முடிவெடிக்கும் திறனை இதன் மூலம் பெற்றுக் கொள்வார்கள் மாணவர்கள். எனவே இந்த மாணவர்களுடைக்குரிய விளையாட்டு வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடப்பாடு ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்தின் இன்றியமையாததொன்றாக இருக்கின்றது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் போட் ரூபி, எமரல், சபயர் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையே நடைபெற்றன. இடையில் பெய்த மழையின் காரணமாக இல்லத் தேர்வு இடம்பெறவில்லை. நடந்து முடிந்த போட்டிகளுக்கான பரிசில்களும் பதக்கங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. ரில் கண்காட்சி, அஞ்சல் ஓட்டம், நூறு மீட்டர் எனப் பல தரப்பட்ட போட்டிகள் இடம்பெற்றன.
இதில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஜய்னுல்லாப்தீன் லாபிர் ஹிதாயத் சத்தார், அக்குறணை பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் அஜ்மீர் பாரூக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-இக்பால்; அலி




No comments:

Post a Comment