இலங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வினையொட்டி ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று நேற்றிரவு ஸ்லவ், மஸ்ஜிதுல் ஜன்னாவில் இடம்பெற்றது.
கொஸ்மோஸ் அமைப்பின் தலைவர் லியாஸ் வாஹித் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்ததோடு ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கைத் தூதர் மனிசா குணசேகர பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில், சமாதானத்தை வலியுறுத்தும் வகையிலான சிறுவர் நாடகம் மற்றும் ஐக்கிய இலங்கையினை வலியுறுத்தும் வகையிலான பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன.
வழக்கமாக ஐக்கிய இராச்சியத்தில் முஸ்லிம்கள் தரப்பினால் இரு வேறு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்ற போதிலும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முக்கிய அமைப்புகள் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னணியில் இவ்வருடம் ஒரு நிகழ்வே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments:
Post a Comment