இம்மாத முடிவுக்குள் தேசிய அரசு இயங்க ஆரம்பிக்கும் என சூளுரைத்துள்ளார் லக்ஷ்மன் கிரியல்ல.
ஸ்ரீலசுகட்சியின் 9 உறுப்பினர்கள் தேசிய அரசை ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்ற அமர்வில் இதற்கான பிரேரணை முன் வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ள அதேவேள ஏலவே இரு உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்படுகின்றமையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வென்றதன் மூலமான ஒரு உறுப்பினரும் இணைவதன் மூலம் சட்ட ரீதியாக ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆயினும், நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி நாடகமாடுவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment