ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.
மைத்ரி அணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருந்த வேளையில் தனியாகப் பிரிந்து சென்று மே தினம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியாகவும் இயங்கிய சுதந்திரக் கட்சியினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக பல தடவைகள் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மஹிந்த எதிர்ப்பாளர்கள் அண்மைய புதிய கூட்டை விரும்பாத அதேவேளை தேசிய அரசில் இணைந்து கொள்ளக் கூடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது இந்நிலையிலேயே தயாசிறி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment