தான் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவலை நிராகரித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
தான் எப்போதுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக மாத்திரமே இருந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவோ அல்லது புதிய கட்சி ஆரம்பிக்கவோ எந்த உத்தேசமும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அதிருப்தியாளர் குழுவுடன் புதிய கட்சியொன்றை சந்திரிக்கா ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்து அதற்கு தனது வாழ்த்துக்களையும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment